×

ஆரணி அருகே சாலைவசதி இல்லாமல் தவிக்கும் மலை கிராம மக்கள்: சுமார் 8 கி.மீ தொலைவுக்கு இறந்தவர் உடலை டோலி கட்டி சுமந்த அவலம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மலை கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் டோலியில் சுமந்து சென்ற அவலம் அரங்கேறியுள்ளது. படவேடு அருகே ஜவாது மலை ஒன்றியம் காணமலை ஊராட்சிக்கு உட்பட்ட மலைகிராமம் எலந்தப்பட்டு சுமார் 200 குடும்பங்களை சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வரும் கிராமத்திற்கு சாலை வசதி கிடையாது.

கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் கடும் வயிற்றுவலியால் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சாந்தி என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழக்கவே அவரது உடலை சொந்த ஊர் நோக்கி கொண்டுவந்த ஆம்புலன்ஸ் அடிவாரத்தில் படவேடு அருகில் சடலத்தை இறக்கிவிட்டு சென்றது. மலையடிவாரத்தில் கிடத்தப்பட்ட உடல் முன்பு அமர்ந்து சாந்தியின் 4 பெண் குழந்தைகள் கதறி அழுதது காண்போரை கலங்க செய்ததாக அமைந்தது. இதனை அடுத்து சாந்தியின் உடலை டோலி மூலம் கட்டி சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுமந்து கடந்துள்ளனர்.

The post ஆரணி அருகே சாலைவசதி இல்லாமல் தவிக்கும் மலை கிராம மக்கள்: சுமார் 8 கி.மீ தொலைவுக்கு இறந்தவர் உடலை டோலி கட்டி சுமந்த அவலம் appeared first on Dinakaran.

Tags : Aarani ,Dolly ,Tiruvannamalai ,Tiruvannamalai district ,Arani ,Dinakaran ,
× RELATED திருவண்ணாமலை கோயில் வழக்கை சிறப்பு...