×

நைஜீரியாவில் 300க்கும் மேற்பட்டோர் ஒரே படகில் ஏறியதால், பாரம் தாங்காமல் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து : 103 பேர் உயிரிழப்பு!

அபுஜா : நைஜீரியாவில் நைஜர் ஆற்றில் படகு கவிழ்ந்ததில், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 103 பேர் உயிரிழந்துள்ளனர். நைஜீரியாவின் வடக்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அண்டை நாடான நைஜரில் உள்ள குவாரா மாநிலத்தில் நடந்த திருமணத்திற்குச் சென்றனர். திருமணம் முடிந்த பின்னர் தங்களது சொந்த ஊருக்கு 300க்கும் மேற்பட்ட மணமக்களின் உறவினர்கள் படகில் திரண்டனர். அப்போது, பாரம் தாங்காமல் அதிகாலை நேரத்தில் நைஜர் ஆஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 103 பேர் வரை உயிரிழந்துள்ளதாக நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பலரைக் காணவில்லை என்றும் கூறிய அதிகாரிகள், குறிப்பிட்ட படகில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றியதால் விபத்து நடந்ததாக தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் ஆற்றில் மூழ்கி சிறுவர்கள் உள்பட 103 பேர் பலியாகினர். மேலும் பலர் மாயமாகி இருப்பதால் அவர்களை மீட்பு படையினர் தேடி வருகின்றனர். எனவே பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

The post நைஜீரியாவில் 300க்கும் மேற்பட்டோர் ஒரே படகில் ஏறியதால், பாரம் தாங்காமல் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து : 103 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Nigeria ,Abuja ,Niger River ,Northern Nigeria ,
× RELATED சிறைக்குள் வெள்ளம் 100 கைதிகள் தப்பி ஓட்டம்