×

திருவாடானை அருகே வீடு புகுந்து நகை கொள்ளை

திருவாடானை, ஜூன் 16: திருவாடானை அருகே சினேகவல்லிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாகசுந்தரம் மகன் கேசவன்(36). டெய்லர் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை கேசவன் கடையை திறக்க சென்று விட்டார். அவரது மனைவி வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் கடைக்கு சென்று விட்டு மதியம் வீடு திரும்பிய கேசவன் அவரது வீட்டை திறந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம ஆசாமிகள் பீரோவில் இருந்த தங்க மோதிரங்கள்,செயின் உட்பட சுமார் 8 பவுன் நகைகளை திருடிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

அதிர்ச்சியடைந்த கேசவன் திருட்டு சம்பவம் குறித்து திருவாடானை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பட்டப்பகலில் வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 8 பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post திருவாடானை அருகே வீடு புகுந்து நகை கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Thiruvadanai ,Nagasundaram ,Kesavan ,Sinegavallipuram ,Thiruvadan ,
× RELATED சீர்காழி அருகே வீட்டில் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு