×

பழநியில் இன்று ஹெல்த் மேளா பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

 

பழநி, ஜூன் 16: பழநியில் இன்று நடைபெறும் ஹெல்த் மேளாவில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பழநி நகராட்சி, நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம் சார்பில் இன்று (ஜூன் 16, வெள்ளிக்கிழமை) ஹெல்த் மேளா காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இதில் காலை 8 மணி முதல் 9 மணி வரை யோகா நிகழ்ச்சியும், காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை பழநி நகராட்சி அலுவலகத்தில் ரத்ததான முகாமும் நடைபெறுகிறது.

காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அண்ணாமலை மகப்பேறு மருத்துவமனையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள துணை சுகாதார நிலையத்தில் மற்ற மருத்துவ சேவைகளான மக்களை தேடி மருத்துவம், மொபைல் எக்ஸ்ரே, புற்றுநோய் சோதனை, இசிஜி, ரத்த பரிசோதனை, ஆயுஷ்மான் பாரத் மருத்துவ கணக்கு உருவாக்குதல், ஏஎன்சி போன்றவை இம்முகாமில் நடைபெற உள்ளது. முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

The post பழநியில் இன்று ஹெல்த் மேளா பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Padhani ,Health Mela ,Palani ,Padani ,
× RELATED பழநி வடகவுஞ்சியில் பாதை வசதி ஏற்படுத்தி தர கோரி மனு