×

யானை தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு வனத்துறை சார்பில் நிவாரணம்

 

பந்தலூர்,ஜூன்16: பந்தலூர் அருகே அய்யன்கொல்லி பகுதியில் காட்டு யானை தாக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு வனத்துறை சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுக்கா, அய்யன்கொல்லி அருகே நம்பியார்குன்னு அயனிபுரா ஆதிவாசி காலணியில் வசிப்பவர் பாஸ்கரன்(50).கூலித் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் வேலைக்கு சென்று வீட்டிற்கு வரும்போது கேரள வனப்பகுதியில் இருந்து வந்த யானை ஒன்று பாஸ்கரனை தாக்கியுள்ளது உயிருக்கு போராடியவரை வனத்துறையினர் மீட்டு பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பாஸ்கரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர் யானை தாக்கி பலியான பாஸ்கரனின் சடலத்தைநேற்று பிரேத பரிசோதனை செய்து உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.அவருக்கு வனத்துறை சார்பில் முதல் கட்ட நிவாரணம் தொகையாக ரூ.50 ஆயிரத்தை அவரது மகன்கள் பாபு,விஷ்ணு,ஜிஷ்னு ஆகியோரிடம் மாவட்ட வன அலுவலர் கொம்மு ஓம்கார் உத்தரவின்பேரில் உதவி வனப் பாதுகாவலர் கருப்பையா, பிதர்காடு ரேஞ்சர் ரவி ஆகியோர் வழங்கினர்.யானை தாக்கி இறந்த சம்பவத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பந்தலூரில் தேவாலா டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

The post யானை தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு வனத்துறை சார்பில் நிவாரணம் appeared first on Dinakaran.

Tags : Bandalur ,Ayyankolli ,Dinakaran ,
× RELATED பந்தலூர் அருகே கல்லூரி மாணவர் மீது தாக்குதல்