×

பூசாரியிடம் சாட்டையடி வாங்கி நூதன வழிபாடு

போச்சம்பள்ளி, ஜூன் 16: போச்சம்பள்ளி அருகே பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவில் பூசாரியிடம் பக்தர்கள் சாட்டையடி வாங்கி, நூதன வழிபாடு நடத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே கோடிபுதூர் தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ள பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா, நேற்று முன்தினம் நடந்தது. இதில், தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து பெண்கள் உள்பட திரளான பக்தர்கள், கோயில் முன்பு முட்டி போட்டு கொண்டு, கையை மேலே தூக்கியவாறு அமர்ந்திருந்தனர். அப்போது, கோயில் பூசாரி, பக்தர்களை சாட்டையால் அடித்து ஆசி வழங்கினார். பூசாரியிடம் சாட்டை அடி வாங்கினால், தங்களை பிடித்துள்ள காத்துகருப்பு, பேய், பிசாசு விலகி ஓடி விடும் என்பது ஐதீகமாக உள்ளது. பின்னர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

The post பூசாரியிடம் சாட்டையடி வாங்கி நூதன வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Bochambally ,Bhadrakaliamman ,festival ,
× RELATED நெல் அறுவடை பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை