×

நாலுமாவடியில் புதிய பள்ளி கட்டிடம்

நாசரேத், ஜூன் 16: நாலுமாவடியில் காமராஜர் மழலையர் நர்சரி மற்றும் துவக்கப்பள்ளி கட்டிடத்தை மோகன் சி.லாசரஸ் திறந்து வைத்தார். நாலுமாவடியில் காமராஜர் கல்வி அறக்கட்டளை நிர்வாகம் சார்பில், காமராஜர் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி தொடங்கப்பட்டு உள்ளது. இப்பள்ளிக்கு நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் மூலம் நடைபெற்று வரும் புதுவாழ்வு சங்கம் சார்பில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு காமராஜர் மேல்நிலைப்பள்ளி தலைவர் அழகேசன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் திருநீலகண்டன் வரவேற்றார். பள்ளி செயலாளர் நவநீதன் முன்னிலை வகித்தார். தாமஸ் ஜெயபால், பள்ளி முதல்வர் கல்பனா மலர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். புதிய ஸ்மார்ட் வகுப்பறைகளையும், புதிய கட்டிடத்தையும் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். இதில் காமராஜர் கல்வி அறக்கட்டளை உறுப்பினர்கள் சிவலிங்கம், ஜின்னா, பஞ்சாயத்து தலைவர்கள் நாலுமாவடி இசக்கிமுத்து, அம்மன்புரம் ஞானராஜ், அங்கமங்கலம் பானுபிரியா மற்றும் சுதாகர் உள்பட பெற்றோர், ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். பள்ளி துணை முதல்வர் பெர்சியா நன்றி கூறினார்.

The post நாலுமாவடியில் புதிய பள்ளி கட்டிடம் appeared first on Dinakaran.

Tags : Nalumavadi ,Nazareth ,Mohan C. Lazarus ,Kamaraj Kindergarten Nursery and Primary ,School ,Nalumavadi… ,
× RELATED சிலம்ப போட்டியில் வெற்றி: நாசரேத் மர்காஷிஸ் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு