×

சேலம்காரரின் அணியில் உள்ளவர்களை தூக்க நினைக்கும் ெநற்களஞ்சிய மாவட்ட மாஜி அமைச்சரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘பூட்டு மாவட்டத்தில் இலை கட்சியில் நடக்கும் குஸ்தியை பற்றி சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘பூட்டு மாவட்டத்தின் நிலப்பெயர் கொண்ட ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக நான்கெழுத்துகாரர் இருக்கிறார். இவர், இலைக்கட்சியின் மாஜி மந்திரியின் மருமகனாம். ஒரு காலத்தில் மாவட்டத்தில் நிழல் மந்திரியாக உலா வந்தவர். இவருக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் எப்படியாவது சீட் வாங்க வேண்டுமென, மாஜி மந்திரி காய் நகர்த்தி வந்தார். ஆனால், இவருக்கு எப்போதும் எதிராக உள்ள உளறல் மாஜி மந்திரி, தலைமையிடம் பேசி அப்படியொரு வாய்ப்பு கிடைப்பதை காலி செய்து விட்டாராம். இந்த சோதனை ஒருபுறமிருக்க, தற்போது நான்கெழுத்துக்காரரின் பதவியே பறிபோகும் நிலை ஏற்பட்டிருக்கிறதாம். இவரது ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 20 கவுன்சிலர்கள் இருக்காங்க. இதில் சுயேச்சைகள் 4 பேருடன் சேர்த்து, இலைக்கட்சியின் பலம் 15 ஆக இருந்தது. ஆளுங்கட்சியில் 5 கவுன்சிலர்கள் இருந்தாங்க. அரசு ஒப்பந்ததாரர்கள் மூலம் கிடைத்த வசூலை பங்கீடு செய்வதில் தலைவருக்கும், இலைக்கட்சி கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் அதிருப்தியாம். இதை கண்டித்து இலைக்கட்சியிலிருந்து 5 கவுன்சிலர்கள் வெளியேறி ஆளுங்கட்சியில் இணைந்தாங்களாம். தற்போது 2 கட்சிகளும் சமநிலையில் உள்ளதால் ஒன்றிய குழு தலைவரின் பதவி பறி போக வாய்ப்புள்ளதாம். இதனால் மருமகன் மகா குழப்பத்தில் தவிக்கிறாராம். பிரச்னைக்குரிய இந்த சமயத்தில் இவரது மாமாவான மாஜி மந்திரி சென்னையில் முகாமிட்டுள்ளாராம்…’’ என்றார் விக்கியனந்தா.

‘‘ பார்லிமென்ட் தேர்தல் அறிவிக்கும் வரை அமைதி காக்க சேலம்காரர் முடிவு செய்துள்ளாராமே, அப்படியா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலைகட்சியில் ஏற்பட்டிக்கும் விரிசல்களை நல் வாய்ப்பாக பயன்படுத்தி மலராத கட்சியை மலர வைப்பேன்னு தமிழக தலைவர் சபதம் போட்டுருக்காராம். அதுவும் ஒன்றிய தலைமைகிட்ட அனுமதி வாங்கிக்கிட்டுத்தான் இந்த வேலையை செய்யத் தொடங்கியிருக்காராம். இலையை கசக்கி சாறு எடுக்காமல் விடப்போவதில்லை. இனிமேல் நம் தலைமையில்தான் கூட்டணி என தேடி வரும் வகையில் நிலையை மாற்றிக்காட்டுவேன்னு சொல்லியிருக்காராம். இருபது சீட்டை வாங்கியே தீருவேன்னும் சொல்லிக்கிட்டு, முதலில் தன்னை ஒரு தலைவராகவே நினைக்காத சேலத்துக்காரரை தன்னிடம் மண்டியிட வைப்பதுதான் அவரது முதல் வேலையாம். கொங்கு மண்டலத்துக்காரரை பெரும்பாலானோர் ஏத்துக்கிட்டாங்களாம். அப்படின்னா நானும் கொங்குதானே.. ஏன் என்னை ஏத்துக்கலங்குற கோபம்தானாம். இதற்காக இலைக் கட்சியிலிருந்து அவரை ஓரம்கட்டிவிட்டு, தேனிக்காரரை முன்னுக்கு கொண்டுவருவேன்னு செய்திய கசிய விட்டுருக்காராம் கிளைத்தலைவர். ஆனா இவரது ஆட்டத்தை பழம்தின்னு கொட்டை போட்ட சேலத்துக்காரர் பார்த்துக்கிட்டிருக்காராம். அதே நேரத்துல தனது அடிப்பொடிகளை வைத்து பதில் சொல்லிக்கிட்டிருக்காராம். இதில் கோபமா ஏதாவது சொல்லப்போயி வலையில சிக்கிக்கிட கூடாதுங்கிறதுலயும் உறுதியா இருக்காராம். பேசும் வரை பேசட்டும், சமயம் வரும்போது சரியா செய்வோமுன்னு அவரது நெருங்கிய கூட்டாளிகளிடம் சொல்லிக் கிட்டிருக்காராம் சேலத்துக்காரர்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ நாடாளுமன்ற ேதர்தலுக்கு வேலை செய்ய மாட்டோம்னு சொல்றது யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘ வெயிலூர்ல தாமரை கட்சி சாதனைய விளக்கி பொதுக்கூட்டம் நடத்துனாங்க. இந்த கூட்டத்துல, நீதி கட்சி தலைவரும் கலந்துகிட்டாரு. மேடையில அவரு பேசும்போது, மனசுல பட்டதை பேசிட்டாராம். அது இலைகட்சிக்காரங்களுக்கும், தாமரை கட்சிக்காரங்களுக்கும் குத்தி காட்டுன மாதிரி இருந்துச்சாம். தாமரையில ஒருமுறையும், இலையில ஒருமுறையும்னு நின்னு தோல்வியடைஞ்சுட்டாரு. இப்படி ஒவ்வொரு 5 வருஷத்துக்கு ஒருமுறை மட்டும் தேர்தல்ல போட்டியிட வந்தா.. ஜனங்க எப்படி ஏத்துக்குவாங்க. அடிக்கடி வந்து மக்களை சந்திச்சு நிகழ்ச்சியில கலந்துகிட்டாதான, மக்கள் மனசுல இடம் பிடிக்க முடியும். கூட்டணியில இருக்குறவங்களையே… துரோகிகள்னு பேசுனா.. அவருக்கு யாரு வேலை செய்வாங்க. வர்ற தேர்தல்ல ஒரு வேளை அவர் நின்னா, தோற்கடிக்க இப்பவே திட்டம் போடுறாங்களாம். …’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ சேலம்காரரின் அணியில் உள்ளவர்களை தூக்க ஸ்கெட்ச் யார் போட்டிருக்கா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலை கட்சியில் சேலம்காரர், தேனிக்காரர் என 2 அணியாக உள்ளனர். இதில் சேலம்காரர் கை ஓங்கியிருப்பதால் தேனிக்காரர், குக்கர் கட்சி தலைமையை சந்தித்து அவருடன் இணைந்தார். தொடர்ந்து, குக்கர் கட்சி சார்பில் நெற்களஞ்சிய மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கூட்டத்தை காட்டுவதற்காக தேனிக்காரர் அணியில் உள்ள மாஜி அமைச்சர் வைத்தியானவர் அவரது ஆதரவாளர்களுடன் திளராக கலந்து கொண்டார். இந்த பொதுக்கூட்டத்தை தொடர்ந்து சேலம்காரர் அணியில் கவனிக்கப்படாமல் உள்ள மனுநீதி சோழன், கடலோர மாவட்ட மாஜி அமைச்சர்களின் ஆதரவாளர்களை இழுப்பதற்கான முயற்சியில் குக்கர் கட்சி பொறுப்பாளர்கள், வைத்தியானவருடன் சேர்ந்து தீவிரமாக இறங்கியுள்ளனர். ‘வைட்டமின் ப’ கொடுத்து அவர்களை ஸ்கெட்ச் போட்டு தூக்குவதற்கான வேலை திரைமறைவில் நடந்து வருதாம்.. இந்த விவகாரம் தெரிய வந்த மாஜி அமைச்சர்கள், சேலம்காரர் கவனத்துக்கு கொண்டு சென்றனர். இதில் உச்ச கட்ட டென்சனுக்கு சென்ற சேலம்காரர், இந்த தகவலை என்னிடம் சொல்வதற்கு பதிலாக நிர்வாகிகளை தக்க வைப்பதற்கான நடவடிக்கையில் முதலில் இறங்குங்க என மாஜி அமைச்சர்களை கடிந்து கொண்டாராம். இதற்கான முயற்சியில் 2 மாஜி அமைச்சர்கள் நேரிடையாகவே களத்தில் இறங்கியுள்ளார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஹனிபீ மாவட்டத்தில் இலை கட்சியில் ஆர்வம் இல்லாமல் இருக்கும் கட்சிக்காரர்களை பற்றி சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ஹனிபீ மாவட்டத்துக்கு மாவட்ட செயலாளராக தங்கள் தொகுதியை சேர்ந்தவரை நியமிக்க வேண்டும். அதுவும் தொகுதியில் செல்வாக்கான உள்காட்டுக்காரரை நியமிக்கணும் என சேலத்துக்காரரிடம் கோரிக்கை வச்சுக்கிட்டு இருக்காங்களாம். அவரோ, ஆகஸ்ட் மாதம் தூங்கா நகரில் மாநாடு நடத்திய பிறகே மாவட்ட செயலாளரை நியமிக்க உள்ளதாக நிர்வாகிகளிடம் சொல்கிறாராம். ஆனால், மாவட்டத்தில் உள்ள சேலத்துக்காரரின் சமூகத்தை சேர்ந்த ஒரு அமைப்பு செயலாளர் தனக்குத்தான், மாசெ பதவி என மார் தட்டி வருகிறாராம். மறுபுறம் பட்டி தொகுதிக்காரர்கள் இவரை விரும்பவில்லையாம். இதனால் பட்டி தொகுதியை சேர்ந்தவர்களை மாநாடுக்கு அழைக்காமல் சேலத்துக்காரர் புறக்கணிக்க திட்டமிட்டுள்ளதாக பரபரப்பாக பேசிக்கிறாங்க. அதே நேரம் ஹனீபீ மாவட்டத்தில் இதுவரை இலைக்கட்சி சார்பில் ஏன் மாசெ பதவி யாருக்கும் வழங்கப்படவில்லை. ஏன் தாமதம் என புரியாமல் மாவட்ட நிர்வாகிகள் மண்டை காயுதாம்…’’ என்றார் விக்கியானந்தா.

The post சேலம்காரரின் அணியில் உள்ளவர்களை தூக்க நினைக்கும் ெநற்களஞ்சிய மாவட்ட மாஜி அமைச்சரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : former minister ,Enlakalanjiya ,Salemkar ,wiki ,Buttu district ,Uncle ,Peter ,Bhuttu ,minister ,Enlakalanjiya district ,Dinakaran ,
× RELATED பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு...