×

₹9.98 லட்சம் மதிப்பில் ஏரி குட்டை சீரமைக்கும் பணிகளை கலெக்டர் ஆய்வு 5 கிராமங்களில் உள்ள மக்கள் பயன்பெற நடவடிக்கை குடியாத்தம் அடுத்த ராமாலை ஊராட்சியில்

குடியாத்தம், ஜூன் 16: குடியாத்தம் அடுத்த ராமாலை ஊராட்சியில் ₹9.98 லட்சம் மதிப்பில் எரி குட்டை சீரமைக்கும் பணிகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார். இதில் 5 கிராமங்களில் உள்ள மக்கள் பயன்பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ராமாலை ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஏரி புதுமனை குட்டையை பொதுமக்கள் பயன் பெரும் வகையில் ₹9.98 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த குட்டை மூலம் சுற்றியுள்ள 5 கிராமங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் மக்கள் பயன் பெறுவர். மேலும் மழை காலங்களில் இந்த குட்டை நிரம்பினால் குடிநீர் பிரச்சனையும் இருக்காது.

இப்பணிகளை, கலெக்டர் குமாரவேல் பாண்டியன், குடியாத்தம் சப்-கலெக்டர் வெங்கட்ராமன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது ஏரி குட்டையை ஒப்பந்த பணியாளர்கள் தூர்வாரும் பணியை மேற்கொண்டிருந்தனர். வெளிப்புறம் 2 அடி ஆழம், உள்குட்டை 3 அடி ஆழம், உள்குளம் 15 மீட்டர் நீளம் மற்றும் அகலம் கொண்டு இந்த ஏரிக்குட்டை அமைக்கப்படுகிறது. இப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் அதேபோல் ராமாலை கிராமத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைப்பது குறித்து எம்எல்ஏ அமலு விஜயனுடன், பல்வேறு துறை அதிகாரிகள் ஆலோசனை செய்து இடத்தினை பார்வையிட்டனர். அப்போது தாசில்தார் விஜயகுமார், பிடிஓக்கள் கார்த்திகேயன், திருமலை ஆகியோர் உடனிருந்தனர்.

The post ₹9.98 லட்சம் மதிப்பில் ஏரி குட்டை சீரமைக்கும் பணிகளை கலெக்டர் ஆய்வு 5 கிராமங்களில் உள்ள மக்கள் பயன்பெற நடவடிக்கை குடியாத்தம் அடுத்த ராமாலை ஊராட்சியில் appeared first on Dinakaran.

Tags : Ramalai panchayat ,Kudiatham ,Eri pond ,Dinakaran ,
× RELATED குடியாத்தம் அருகே கோயிலுக்கு சென்ற பெண்ணை கடித்து குதறிய தெருநாய்