×

திருவள்ளூர் மக்களின் வசதிக்காக மணல் குவாரியை உடனே செயல்படுத்த வேண்டும்: கலெக்டரிடம் டிப்பர் லாரி உரிமையாளர்கள் மனு

 

திருவள்ளூர்: திருவள்ளூர் மக்களின் வசதிக்காக மணல் குவாரியை உடனே செயல்படுத்த வேண்டும் என்று கலெக்டரிடம் டிப்பர் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் அரசின் சாலை விரிவாக்கத் திட்டப் பணிகளுக்கு அரசு குவாரி செயல்பட்டு வருகிறது. ஆனால் பொதுமக்கள் தாங்கள் கட்டும் வீடுகளுக்கு மணல், சவுடு மண் கிடைக்காமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்நிலையில் செங்குன்றம் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் தலைமையில் சங்க நிர்வாகிகள் காமராஜ், கிருஷ்ணமூர்த்தி, கணேசன் உள்ளிட்ட லாரி உரிமையாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

அந்த மனுவில், திருவள்ளூர் மாவட்டத்தில் வணிக ரீதியாக தயார் நிலையில் உள்ள சவுடு மண், கிராவல் குவாரியை உடனடியாக திறந்து இதனை நம்பியுள்ள 10 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும். அக்கரம்பாக்கம் குவாரி வணிக ரீதியாக செயல்பட்டு வந்த நிலையில், தனிப்பட்ட விரோதம் காரணமாக நடைபெற்ற குற்ற சம்பவத்தால் அந்த குவாரிக்கு தடை விதிக்கப்பட்டது. அதனை மீண்டும் திறந்து செயல்படுத்த வேண்டும். எனவே பொதுமக்களின் வசதிக்காக திருவள்ளூர் மாவட்டத்தில் வணிக ரீதியாக சவுடு மண், கிராவல் குவாரியை பரவலாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருவள்ளூர் மக்களின் வசதிக்காக மணல் குவாரியை உடனே செயல்படுத்த வேண்டும்: கலெக்டரிடம் டிப்பர் லாரி உரிமையாளர்கள் மனு appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Tipper ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...