×

செந்தில்பாலாஜி புகார் தரதரவென இழுத்து தரையில் தள்ளி அமலாக்கத்துறையினர் தாக்குதல்: மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் பேட்டி

சென்னை: தரையில் தள்ளி தன்னை தரதரவென்று இழுத்து சென்றதாக அமைச்சர் செந்தில் பாலாஜி வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், அவரின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது என்று மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் தெரிவித்தார். மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் கண்ணதாசன், அமைச்சர் செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் நேரில் சந்தித்து வாக்குமூலம் பெற்றார். விசாரணைக்கு பின் மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நிருபர்களிடம் கூறியதாவது: அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார் என்ற செய்தியையும், கைது செய்யும் போது மனித உரிமைகள் மீறல் இருப்பதாகவும் புகார் வந்தது. அவர் சிகிச்சை பெறும் அறைக்கு சென்று அவரைப் பார்த்தோம், அவர் மிகவும் சோர்வாக இருந்தார். அமைச்சர் செந்தில் பாலாஜி எங்களிடம் சில கருத்துக்களை தெரிவித்தார்.

அதில் தான் கைது செய்யப்பட்ட போது கடுமையாக நடத்தப்பட்டதாகவும், தன்னை தரதரவென்று இழுத்து தரையில் தள்ளியதால் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் நெஞ்சு வலியால் தொடர்ந்து பேச முடியவில்லை என்றார். அது மட்டும் இன்றி தனக்கு துன்பம் கொடுத்த அதிகாரிகளின் பெயரையும் அவர் குறிப்பிட்டுள்ளார். விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்தும் அமலாக்க துறையினரால் துன்புறுத்தப்பட்டதாகவும், கீழே தள்ளியதாகவும் செந்தில் பாலாஜி தெரிவித்தார். காயங்கள் குறித்து மருத்துவர்கள் தான் கூற வேண்டும். ஆனால் காது ஓரமாக தலையில் காயம் இருந்தது. தற்போது தரப்பட்ட புகாரிலும் ஏற்கனவே பெறப்பட்ட புகாரிலும் அடிப்படையில் இன்று விசாரணை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post செந்தில்பாலாஜி புகார் தரதரவென இழுத்து தரையில் தள்ளி அமலாக்கத்துறையினர் தாக்குதல்: மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Senthilbalaji ,Human Rights Commission ,Kannadasan ,Chennai ,Minister ,Senthil Balaji ,
× RELATED தூத்துக்குடி துப்பாக்கி சூடு...