×

ரத்த புற்று நோய் பாதிப்பு; அம்ரித்பால் சிங்கின் கூட்டாளி அவ்தார் சிங் உயிரிழப்பு

லண்டன்: காலிஸ்தான் தீவிரவாதி அம்ரித் பால் சிங்கின் முக்கிய கூட்டாளியான அவ்தார் சிங் புர்பா இங்கிலாந்து மருத்துவமனையில் உயிரிழந்தார். சீக்கியர்களுக்கு தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தி வரும் காலிஸ்தான் அமைப்பினர் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளில் உள்ள இந்து கோயில்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். சீக்கிய மதபோதகர் அம்ரித் பால் சிங்குக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பி வருகிறார்கள். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்த தாக்குதலில் இங்கிலாந்து நாட்டை அடிப்படையாக கொண்டு செயல்படும் காலிஸ்தான் விடுதலை படையின் தலைவருமான அப்தர் சிங் புர்பா என்ற கந்தாவுக்கு தொடர்புடையதாக கூறப்பட்டது. இவர் காலிஸ்தான் தீவிரவாதி அம்ரித் பால் சிங்கின் நெருங்கிய கூட்டாளியாவார். கடந்த சில நாட்களாக ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவ்தார் சிங் புர்பா இங்கிலாந்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.

The post ரத்த புற்று நோய் பாதிப்பு; அம்ரித்பால் சிங்கின் கூட்டாளி அவ்தார் சிங் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Amritbal Singh ,Avtar Singh ,LONDON ,Calistan ,Amrit Paul Singh ,Burpa UK ,Sikhans ,Amritpal Singh ,
× RELATED லண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்ற...