×

படித்த இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் செங்கல்பட்டில் 390 இ-சேவை மையங்கள் செயல்பட அனுமதி: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில், 390 இ-சேவை மையங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் விடுத்துள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் படித்த இளைஞர்களையும், தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் மையங்களை நிறுவி செயல்படுத்த துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் 390 இ-சேவை மையங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த திட்டத்தின் நோக்கம், இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, இ-சேவை மையத்தில் மக்கள் காத்திருக்கும் நேரத்தை குறைத்து, மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவையை வழங்குவதாகும். இத்திட்டத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்ய https://tnesevai.tn.gov.in/ அல்லது (https://.tnega.tn.gov.in/ என்ற இணைய முகவரியை பயன்படுத்தவும், விண்ணப்பதாரர்கள் 1.6.2023 அன்று காலை 11.30 மணி முதல் 30.6.2023 இரவு 8 மணி வரை விண்ணப்பிக்கலாம். கிராமப்புறங்களில் இ-சேவை மையம் செயல்படுத்துவதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.3000/- மற்றும் நகர்ப்புறத்திற்கான கட்டணம் ரூ.6000/- ஆன்லைன் முறையில் செலுத்தப்பட வேண்டும்.

விண்ணப்பதாரர்களுக்குரிய பயனர் எண் மற்றும் கடவுச்சொல் விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக வழங்கப்படும். மேலும், அருகிலுள்ள இ-சேவை மையங்களின் தகவல்களை ‘முகவரி’ ஆண்ட்ராய்டு மொபைல் செயலியை பயன்படுத்தி காணலாம் அல்லது https://.tnega.tn.gov.inலீttஜீs:// இணையதளத்தில் காணலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post படித்த இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் செங்கல்பட்டில் 390 இ-சேவை மையங்கள் செயல்பட அனுமதி: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Chengalpat ,Chengalpattu ,Collector ,Rakulnath ,
× RELATED செங்கல்பட்டில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது