×

சாதனைகளை செய்யும்போதெல்லாம் சோதனையை ஏற்படுத்துகிறார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு..!

சென்னை: சாதனைகளை செய்யும்போதெல்லாம் சோதனையை ஏற்படுத்துகிறார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு, ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.250 கோடியில் கட்டப்பட்டுள்ள ‘கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை’யை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை கிண்டியில் உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்த பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது; கலைஞர் என்றாலே கிங் தான். வாழ்நாள் முழுவதும் கிங்காகவும், கிங் மேக்கராகவும் இருந்தவர் கலைஞர்.

ஒரு மனிதனின் வாழ்க்கை மரணத்துக்கு பிறகு கணக்கில் கொள்ளப்பட வேண்டும் என்று கூறியவர் கலைஞர். சமுதாயத்தில் உள்ள நோய்களை குணப்படுத்த வந்தவர்கள் கலைஞர். கலைஞர் பெயரை எந்த திட்டத்துக்கும் வைக்கலாம்; அதற்கு பொருத்தமானவர் கலைஞர். 15 மாதங்களில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை கட்டி முடித்துள்ளோம். 1,000 படுக்கை வசதிகளுடன் கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. 10 அறுவை சிகிச்சை அரங்குகள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் உலகத் தரம் வாய்ந்த மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.

2015ல் அடிக்கல் நாட்டிவிட்டு 2023 வரை 2வது செங்கல்லை கூட எடுத்து வைக்கவில்லை ஒன்றிய அரசு என 8 ஆண்டுகளாக இதுவரை கட்டப்படாத மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை மறைமுகமாக சுட்டிக்காட்டி முதல்வர் பேசினார். தொடர்ந்து பேசிய அவர்; வேலூர் அருகே குறைந்த கட்டணத்தில் 2 ஹெக்டேரில் 150 படுக்கை வசதி கொண்ட தங்கும் விடுதி கட்டப்படும். மருத்துவ சிகிச்சை பெற வருவோர் வசதிக்காக சத்துவாச்சாரி அருகே பெருமுகை கிராமத்தில் தங்கும் விடுதி காட்டப்படும். குறைந்த கட்டணத்தில் மக்கள் தங்கும் வகையில் கலைஞர் நூற்றாண்டு தங்கும் விடுதி காட்டப்படும்.

வெளியூரிலிருந்து மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக வருவோர் தங்குவதற்கு ஏற்ப விடுதி காட்டப்படும். 2015ல் அதிமுக ஆட்சியில் தொடங்கிய குழந்தைகள் னால பெட்டகம் உள்ளிட்ட திட்டங்களை தொடர்கிறோம். 1.40 கோடி பேர் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். சாதனைகளை செய்யும்போதெல்லாம் சோதனையை ஏற்படுத்துகிறார்கள். திசை திருப்ப பல்வேறு தடைகளை கொடுத்தாலும் நாங்கள் திசை திரும்ப மாட்டோம். எங்களை திசை திருப்பும் முயற்சியாக பல்வேறு தடைகளை கொடுத்து வருகின்றனர் என்றும் கூறினார்.

The post சாதனைகளை செய்யும்போதெல்லாம் சோதனையை ஏற்படுத்துகிறார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு..! appeared first on Dinakaran.

Tags : G.K. stalin ,Chennai ,CM ,Kindi, Chennai ,
× RELATED சென்னையில் 6 செ.மீ. மழை பதிவு