×

இந்தியாவில் இருந்து இந்தாண்டு மட்டும் 6,500 பெரும் பணக்காரர்கள் நாட்டை விட்டு ஓட முடிவு?: ஆய்வறிக்கையில் கணிப்பு

லண்டன்: இந்தியாவில் இருந்து இந்தாண்டு மட்டும் 6,500 பெரும் பணக்காரர்கள் நாட்டை விட்டு ஓட முடிவு செய்துள்ளதாக ஆய்வறிக்கையில் ெதரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் அதிகளவில் பணக்காரர்கள் கொண்ட நாடுகளின் தரவரிசை பட்டியலில், முதலிடத்தில் அமெரிக்கா, அதற்கடுத்த இடங்களில் ஜப்பான், சீனா, ஜெர்மனி, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், இந்தியா போன்ற நாடுகள் உள்ளன. இந்தியாவை பொருத்தமட்டில் 10வது இடத்தில் அதிக பணக்காரர்கள் கொண்ட நாடாக உள்ளது. இந்நிலையில் ‘ஹெலன் அண்ட் பார்ட்னர்ஸ்’ என்ற அமைப்பு, உலகளவிலான பணக்காரர்களின் விபரம், அவர்கள் தங்களது நாட்டை விட்டு வெளிநாடுகளில் முதலீடு செய்தல் அல்லது குடிபெயர்தல் ேபான்ற விபரங்களை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்ட ஆய்வறிக்கையில், ‘உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள், தங்கள் நாட்டை விட்டு வெளியேறுவது என்பது அவர்களின் நாட்டின் பொருளாதாரம் எந்த திசையை நோக்கி செல்கிறது என்பதைக் காட்டுகிறது. தங்களது சொந்த நாட்டின் மீதான நம்பிக்கை குறைந்து வருவதால், அவர்கள் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். குறிப்பாக தங்களுடைய நாட்டின் ​​அரசியல் ஸ்திரத்தன்மை, அதிகபட்ச வரிகள், தனிப்பட்ட சுதந்திரம், தரமான வாழ்க்கை இல்லாமை, பாதுகாப்பின்மை போன்ற விஷயங்கள் போன்ற காரணங்களால் வெளியேறுகின்றனர். அதனால் அவர்கள் கடுமையான சட்டங்கள் மற்றும் அதிக பொருளாதார சுதந்திரம் கொண்ட நாட்டை தேர்வு செய்கிறார்கள்.

இந்தியாவை பொருத்தமட்டில், இந்த ஆண்டு மட்டும் 6,500 பெரும் பணக்காரர்கள் நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளனர். குறைந்த பட்சம் ஒரு மில்லியன் டாலர்கள் அல்லது அதற்கு மேலான ரூபாயை வேறு நாட்டில் முதலீடு செய்ய விரும்பம் கொண்ட பட்டியலில் இவர்கள் உள்ளனர். இவர்களின் முதலீடு என்பது சொத்துக்கள், பணம், பங்குகள் போன்றவற்றை உள்ளடக்கியதாகும். இந்தாண்டிற்கான முன்மொழியப்பட்ட புள்ளிவிபரத்தின்படி பார்த்தால், சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியாவை சேர்ந்த பணக்காரர்கள் வெளிநாட்டிற்கு குடிபெயர்ந்தவர்கள் பட்டியலில் இடம்பெறுவார்கள். இவர்கள் பெரும்பாலும் ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், அமெரிக்கா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் சொந்துகளை முதலீடு செய்கின்றனர்.

உலக பணக்காரர்கள் பட்டியலின்படி, சீனா, இந்தியா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரேசில் ஆகிய ஐந்து நாடுகளில் இருந்து, அதிகப்படியான பணக்காரர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வார்கள். இந்தியாவில் மொத்தம் 3,44,600 பெரும் பணக்காரர்கள் உள்ளனர். இவர்களில், 100 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களை 1,078 பேர் பெற்றுள்ளனர். ரூ.1 பில்லியன் அல்லது அதற்கு மேலான சொத்துகளை 123 பேர் பெற்றுள்ளனர். அதேநேரம் சீனாவில் 7,80,000 பெரும் பணக்காரர்கள் உள்ளனர். அமெரிக்காவில் 52,70,000 பெரும் பணக்காரர்கள் உள்ளனர்’ என்று தெரிவித்துள்ளது.

The post இந்தியாவில் இருந்து இந்தாண்டு மட்டும் 6,500 பெரும் பணக்காரர்கள் நாட்டை விட்டு ஓட முடிவு?: ஆய்வறிக்கையில் கணிப்பு appeared first on Dinakaran.

Tags : India ,London ,
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...