×

“மேகதாது அணை கட்டினால் தமிழக டெல்டா பகுதிகள் பாலைவனமாக ஆகிவிடும்” : ஜி.கே. வாசன் வலியுறுத்தல்

சென்னை : மேகதாது விவகாரத்தில் சட்டரீதியாக, நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கூட்டம் வருகிற ஜூன் 16-ஆம் தேதி டெல்லியில் நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தில் தமிழக விவசாயிகள் நலன் சார்ந்த முடிவுகளை எடுக்க வேண்டும்.காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கூட்டத்தில் காவிரிப்படுகையில் கர்நாடகா அரசு சார்பில் மேகதாது அணை கட்டுவது சம்பந்தமாக எந்த பேச்சுவார்த்தையும் கூடாது.

மேகதாது அணை கட்டினால் தமிழக டெல்டா பகுதிகள் பாலைவனமாக ஆகிவிடும். ஆகவே மேகதாது விவகாரத்தில் சட்டரீதியாக, நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டத்தில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ள விகிதாச்சாரப்படி தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய தண்ணீரை முறையாக அளிக்க கர்நாடக அரசிற்கு அறிவுறுத்த வேண்டும். காவிரி தண்ணீர் என்பது தமிழக மக்களின் உயிர் நீர், அவற்றை அளிப்பதில் எந்தவித விதி மீறலும் இருக்க கூடாது.தமிழக அரசு, காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டத்தில் தமிழகத்திற்கு கிடைக்க கூடிய உரிமைகளை பெற்றுத்தர முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழக விவசாயிகளின் எதிர்கால நலனில் அக்கரையோடு தமிழக அரசு செயல்பட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post “மேகதாது அணை கட்டினால் தமிழக டெல்டா பகுதிகள் பாலைவனமாக ஆகிவிடும்” : ஜி.கே. வாசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Delta ,G. K.K. Vasan ,Chennai ,K.K. Vasan ,Tamil State Congress ,Tamil Nadu Delta Desert ,Dinakaran ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...