×

பருத்தி பஞ்சுகள் நனைந்து வீணாகியது

தஞ்சாவூர், ஜூன் 15: மெலட்டூர் பகுதியில் கனமழையால் பருத்தி பஞ்சுகள் நனைந்து வீணாகி வருகிறது. இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் மெலட்டூர் அதன் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இந்த மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த பருத்தி பஞ்சுகள் நனைந்து வீணாகி வருகிறது. தேவராயன்பேட்டை, பண்டாவாடை, புலியங்களம் உள்பட பல்வேறு பகுதிகளில் கோடையில் சாகுபடி செய்துள்ள பருத்தி செடிகளில் உள்ள பஞ்சுகள் மழையில் நனைந்து வீணாகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தொடர்ந்து மழை பெய்தால் பருத்தி பயிர்கள் முற்றிலும் வீணாகி பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்தும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பருத்தி விவசாயிகள் கூறுகையில், இந்த ஆண்டு கோடை பருவத்தில் அதிகளவில் பருத்தி சாகுபடி செய்தோம். அதிக வெப்பம் காரணமாகவும், தொடர் கோடை மழையாலும் பருத்தி செடிகள் வளர்ச்சி பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. சுட் டெரிக்கும் வெயிலால் பருத்தி பிஞ்சுகள் உதிர்ந்ததால் எதிர்பார்த்த அளவு காய்கள் காய்க்காமல் மகசூல் குறைந்துள்ளது என்றனர்.

The post பருத்தி பஞ்சுகள் நனைந்து வீணாகியது appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Melatur ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் மருத்துவமனை வளாகத்தில்...