×

கறம்பக்குடி அனுமார் கோயில் அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு இனிப்பு, பேனா வழங்கி வரவேற்பு

கறம்பக்குடி, ஜூன் 15: கறம்பக்குடி அனுமார் கோயில் அரசு தொடக்க பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்கப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகம் முழுவதும் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகள் அனைத்தும் தமிழக அரசு உத்தரவின் படி நேற்று முதல் திறக்கப்பட்டன.

முதல் நாளான நேற்று பள்ளி திறந்தவுடன் கறம்பக்குடி அனுமார் கோயில் அரசு தொடக்க பள்ளியில் வருகை புரிந்த மாணவ மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் விசுவாசம் தலைமையில் ஆசிரியர்கள் வரவேற்றனர். இதில் அப்பகுதியை சேர்ந்த பேரூராட்சி திமுக கவுன்சிலர் ராஜா கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் அனைவருக்கும் இனிப்புகள் கொடுத்தும் மற்றும் பேனா வழங்கியும் வரவேற்றார். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் பள்ளி பணியாளர்கள் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post கறம்பக்குடி அனுமார் கோயில் அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு இனிப்பு, பேனா வழங்கி வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Karambakudi Anumar Temple Government Primary School ,Karambakudi ,Anumar Temple Government Primary School ,Pudukottai ,Dinakaran ,
× RELATED கறம்பக்குடி அருகே கிணற்றில் விழுந்த மாடு பத்திரமாக மீட்பு