×

கரூர் ரத்தினம் சாலையின் வாய்க்கால் ஓரம் தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா?

கரூர், ஜூன் 15: கரூர் ரத்தினம் சாலையின் வழியாக செல்லும் வாய்க்கால் ஓரத்தில் தடுப்புச்சுவர் எழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாநகராட்சி பகுதியில் இருந்து பசுபதிபாளையம், சோமூர், நெரூர், வாங்கல், கரூர் ரயில்வே நிலையம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் சர்ச் கார்னர், ரத்தினம் சாலை வழியாக சென்று வருகிறது. இந்நிலையில், ரத்தினம் சாலையில் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் அருகே எந்தவித தடுப்புகளும் இல்லாத காரணத்தினால் இரவு நேரங்களில் வேகமாக வரும் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் வாய்க்காலில் விழுந்து காயமடைந்து செல்கின்றனர். எனவே, வாய்க்கால் அருகே வாகன ஓட்டிகள் பாதுகாப்பு கருதி தடுப்புகளை ஏற்படுத்த வேண்டும்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரத்தினம் சாலை வழியே செல்லும் வாய்க்கால் ஓரத்தை பார்வையிட்டு தடுப்புச்சுவர் அமைக்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கரூர் ரத்தினம் சாலையின் வாய்க்கால் ஓரம் தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Karur Ratnam Road ,Karur ,Karur Ratinam Road ,Dinakaran ,
× RELATED கரூர் மாநகர பேருந்து நிலையத்தில்...