×

கணக்கம்பாளையம் ஊராட்சிக்கு கூடுதல் குடிநீர் வழங்க கோரிக்கை

 

உடுமலை, ஜூன் 15: உடுமலை ஊராட்சி ஒன்றியத்தின 7-வது வார்டு கவுன்சிலர் குருவம்மாள் சவுந்தரராஜன், திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு மனுவில் கூறியிருப்பதாவது: கணக்கம்பாளையம் ஊராட்சியில் உள்ள குக்கிராமங்களுக்கு கணக்கம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின்கீழ் குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த ஊராட்சியில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். நகராட்சியை ஒட்டியுள்ள பகுதியாக உள்ளதால் பல்வேறு புதிய குடியிருப்புகள் உருவாகி உள்ளன. ஏற்கனவே, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீட்டு குடிநீர் இணைப்புகள் உள்ளன.

ஜல் ஜீவன் திட்டத்தின்கீழ் 350-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மாதம் இருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். தனியாரிடம் இருந்து தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது. எனவே, குடிநீர் வடிகால் வாரியம் தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப கூடுதல் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

The post கணக்கம்பாளையம் ஊராட்சிக்கு கூடுதல் குடிநீர் வழங்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kampampalayam panchayat ,Udumalai ,Ward ,Councilor ,Udumalai Panchayat Union ,Guruvammal Soundararajan ,Tirupur District ,Panchayat Panchayat ,Dinakaran ,
× RELATED உடுமலை அரசு மருத்துவமனையில் சம்பளம் கேட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம்