×

கருநீல நிறத்தில் அணைக்கு வரும் ரசாயன கழிவுநீர்

ஓசூர், ஜூன் 15: தென்பெண்ணை ஆற்றில் கருநீல நிறத்தில், ரசாயன கழிவுகள் கெலவரப்பள்ளி அணைக்கு வருவதால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடகா மாநில தென்பெண்ணை ஆற்று பகுதிகளில், நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக, நேற்று கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 261 கன அடியிலிருந்து 789 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் 4 மதகுகள் வழியாக விநாடிக்கு 560 கனஅடி நீர், தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையின் முழு கொள்ளளவான 44.28 அடியில், தற்போது 41.66 அடிக்கு தண்ணீர் உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வழக்கமாக தண்ணீர் அதிகரிக்கும் போது, தொழிற்சாலைகளிலிருந்து திறந்து விடப்படும் ரசாயன கழிவுநீர் துர்நாற்றத்துடன் நுரை கலந்து வெளியேறும். இந்நிலையில், நேற்று கெலவரப்பள்ளி அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரில் நுரையின்றி தண்ணீர் கரும்பச்சை நிறத்தில் வெளியேறியது. இதனால் அப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

The post கருநீல நிறத்தில் அணைக்கு வரும் ரசாயன கழிவுநீர் appeared first on Dinakaran.

Tags : Hosur ,Kelavarapalli Dam ,Tenpenna river ,
× RELATED சிறுமியை துரத்தி துரத்தி கடித்த தெருநாய்கள்