×

லுங்கி, நைட்டிக்கு தடை: நொய்டா குடியிருப்பு எச்சரிக்கை

நொய்டா: லுங்கி, நைட்டி அணிந்தபடி வெளியே வரக்கூடாது என்று நொய்டா குடியிருப்பு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. டெல்லியை ஒட்டி உள்ள நொய்டாவில் ஹிம்சாகர் குடியிருப்பு உள்ளது. இங்கு 250 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்த குடியிருப்பு நலச்சங்கம் சார்பில் ஜூன் 10ம் தேதி ஒரு நோட்டீஸ் வெளியிடப்பட்டது.

அதில்,’ வீட்டை விட்டு வெளியே வரும் போது உங்கள் ஆடையை யாரும் ஆட்சேபனை தெரிவிக்க வாய்ப்பில்லாதவாறு அணிய வேண்டும். எனவே வீடுகளுக்குள் அணியும் லுங்கி அல்லது நைட்டியை வெளியில் பயன்படுத்தக் கூடாது ’ என்று கூறப்பட்டு இருந்தது. இதைபார்த்த குடியிருப்பு வாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து நோட்டீஸ் திரும்ப பெறப்பட்டது. இதுபற்றி குடியிருப்பு சங்க தலைவர் சிபி கல்ரா கூறுகையில்,’ சில குடியிருப்புவாசிகள் லுங்கி அணிந்தபடி யோகா செய்வதாக புகார் அளித்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது’ என்றார்.

The post லுங்கி, நைட்டிக்கு தடை: நொய்டா குடியிருப்பு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Noida ,Delhi ,Lungi ,Dinakaran ,
× RELATED டெல்லி, நொய்டாவில் 60க்கும் மேற்பட்ட...