×

விதவையிடம் ரூ.15.75 லட்சம் மோசடி அதிமுக பேச்சாளர் கைது

சென்னை: தமிழ்நாடு, மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, விதவையிடம் பணமோசடி செய்த அதிமுக தலைமை கழக பேச்சாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை தரமணி, எம்.ஜி. நகரை சேர்ந்தவர் பரமேஸ்வரி (57). இவரது கணவர் சென்னை மாநகராட்சியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு இரண்டு மகள்கள். இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு பரமேஸ்வரியின் கணவர் இறந்தார். இதையடுத்து அவருடைய செட்டில்மென்ட் பணம் பரமேஸ்வரிக்கு கிடைத்தது.

இதையறிந்த, அவரது கணவரின் நண்பரும், அதிமுக தலைமை கழக பேச்சாளருமான சேகர் (எ) குணசேகரன் (70) பரமேஸ்வரியை அணுகி, மின்சார வாரியத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, அதற்காக ரூ.15.75 லட்சத்தை பெற்றுள்ளார். ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக வேலை வாங்கி தராமல் இருந்துள்ளார். பலமுறை, இதுபற்றி பரமேஸ்வரி அவரிடம், நேரிலும், போனிலும் கேட்டு வந்தார். ஆனால், குணசேகரன் பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பரமேஸ்வரி, தனது பணத்தை தருமாறு, அவரிடம் கறாராக கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த குணசேகரன் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளர். எனவே அதிர்ச்சியடைந்த பரமேஸ்வரி, இதுபற்றி தரமணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் குணசேகரன் மற்றும் அவரது மனைவி சொக்கி மீது, பணமோசடி வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, போலீசார் அதிமுக தலைமை கழக பேச்சாளர் குணசேகரனை நேற்று கைது செய்தனர். பின்னர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

The post விதவையிடம் ரூ.15.75 லட்சம் மோசடி அதிமுக பேச்சாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Widow ,Chennai ,Tamil Nadu, Tamil Nadu ,Chief Corporation ,Electricity Board ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...