×

எல்லைபாதுகாப்பு படை இயக்குனராக கேரளா ஐபிஎஸ் அதிகாரி நியமனம்

புதுடெல்லி; எல்லைப்பாதுகாப்பு படை இயக்குனராக கேரளா ஐபிஎஸ் அதிகாரி நிதின் அகர்வால் நியமிக்கப்பட்டார். எல்லைப்பாதுகாப்பு படை இயக்குனராக இருந்த பங்கஜ்குமார் சிங் கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி ஓய்வு பெற்றார். அதன்பின் புதிய இயக்குனர் நியமிக்கப்படவில்லை. பொறுப்பு இயக்குனராக எஸ்எல் தாவுசன் இருந்தார். இந்தநிலையில் நியமனங்களுக்கான அமைச்சரவை கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை எல்லைபாதுகாப்பு படை புதிய இயக்குனர் பதவிக்கு 1989ம் ஆண்டு கேரள பிரிவு ஐபிஎஸ் அதிகாரி நிதின்அகர்வாலை நியமிக்க ஒப்புதல் கொடுத்தது.

வரும் 2026ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி அல்லது நிதின் அகர்வால் ஓய்வு வயது இதில் எது முதலில் வருகிறதோ, அதுவரை அவர் பதவியில் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து புதிய இயக்குனர் பொறுப்பை நேற்று நிதின் அகர்வால் ஏற்றார். அவர் தற்போது சிஆர்பிஎப் இயக்குனர்(இயக்கம்) பதவியில் இருந்தார். ஐஐடி டெல்லியில் எம்டெக் படித்த இவர், இதற்கு முன்பு சிஐஎஸ்எப், ஐடிபிபி, எஸ்எஸ்பி படைகளில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

The post எல்லைபாதுகாப்பு படை இயக்குனராக கேரளா ஐபிஎஸ் அதிகாரி நியமனம் appeared first on Dinakaran.

Tags : Kerala IPS ,Director of ,Border Security Force ,New Delhi ,Nitin Aggarwal ,Border Security ,Force ,Pankajkumar ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில்...