×

சிங்கப்பூரில் இந்திய பெண்ணை தாக்கிய சீன நபர் குற்றவாளி என தீர்ப்பு

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 57 வயதான இந்திய பெண்ணை தாக்கிய சீன நாட்டை சேர்ந்த நபர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். சிங்கப்பூர் இந்தியரான மேடம் ஹிண்டோச்சா நிதா விஷ்ணுபாய்(57) கடந்த 2021 மே மாதம் கொரோனா தொற்று காலத்தில் பணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது முகமூடியை சரியாக அணியவில்லை என்று கூறி சீன நாட்டை சேர்ந்த வோங் சிங் ஃபோங்(32) விஷ்ணுபாயை திட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கில் வோங் சிங் ஃபோங் குற்றவாளி என சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அவருக்கான தண்டனை விவரம் ஜூலை 31ம் தேதி அறிவிக்கப்படும்.

The post சிங்கப்பூரில் இந்திய பெண்ணை தாக்கிய சீன நபர் குற்றவாளி என தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Singapore ,
× RELATED சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன் சாத்விக் – சிராக் ஜோடி அதிர்ச்சி தோல்வி