நாகர்கோவில்: பெண்களை ஆபாச படம் எடுத்த வழக்கில் காசிக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த காசி(27). கோழிக்கடை நடத்தி வரும் கணேசபுரத்தைச் சேர்ந்த தங்கபாண்டியன் மகன். இவர், பல பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அந்த வீடியோக்கள், புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி அந்தப் பெண்களிடம் பணம் பறித்துள்ளார்.
காசியால் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் புகார் தர முன்வராத நிலையில் பெண் மருத்துவர் ஒருவர் கடந்த மார்ச் மாதம் 22 -ம் தேதி நாகர்கோவில் எஸ்.பி-க்கு மெயில் மூலம் புகார் கொடுத்தார். பின்னர் 2020 ஆம் ஆண்டு காசி கைது செய்யப்பட்டார். பின்னர் இது தொடர்பாக காசி பல பெண்களை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக வழக்கு தொடரப்பட்டது. 120 பெண்கள், 400 வீடியோக்கள் மற்றும் 1,900 ஆபாச படங்கள் காசியின் லேப்டாப்பில் இருந்து கைப்பற்றப்பட்டன. பின்னர், 2020-ல் கைது காசி பின்னர் குண்டர் சட்டத்தின் கீழும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர் மீது போக்சோ வழக்கு, பாலியல் பலாத்கார வழக்குகள் என பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் சிபிசிஐடி போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோக்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறித்த வழக்கில் காசிக்கு ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள காசிக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.1.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
The post பெண்களை ஆபாச படம் எடுத்த வழக்கு.. நாகர்கோவில் காசிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு: நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.