×

பாகாலாவில் ‘வீட்டுக்கு வீடு உங்கள் அரசு’ நிகழ்ச்சி ஜெகன்மோகன் மீண்டும் முதல்வராவது உறுதி

*மண்டல பரிஷத் தலைவர் பேச்சு

திருப்பதி : பாகாலா பகுதியில் நடைபெற்ற ‘வீட்டுக்கு வீடு உங்கள் அரசு’ நிகழ்ச்சியில் பங்கேற்ற போது ஜெகன்மோகன் மீண்டும் முதல்வராவது உறுதி என்று மண்டல பரிஷத் தலைவர் மோகித் தெரிவித்துள்ளார். திருப்பதி மாவட்டம், சந்திரகிரி அடுத்த பாகாலா பகுதியில் ‘வீட்டுக்கு வீடு உங்கள் அரசு’ நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மண்டல பரிஷத் தலைவர் மோகித் கலந்து கொண்டு பொதுமக்களிடம் அரசின் நலத்திட்டம் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

அப்போது, அவர் பேசுகையில், ‘ஆந்திர மாநிலத்தில் அனைத்து குடும்பங்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அரசு அறிவித்துள்ளது. அவற்றை பொதுமக்களுக்கு பயன்படுத்தியும் வருகிறது. முதியோர்களுக்கு பென்ஷன் வழங்கியுள்ளது. அவர்களுக்கு ஆதரவாக தானும் ஒரு பிள்ளையாக உள்ளேன் என்று கூறும் விதமாக வீடு தேடி நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார் முதல்வர் ஜெகன்மோகன். அவர் மீண்டும் முதல்வராவது உறுதி.
அதற்கு பொதுமக்கள் முழு ஆதரவு அளிக்கிறார்கள்’ என்றார்.

The post பாகாலாவில் ‘வீட்டுக்கு வீடு உங்கள் அரசு’ நிகழ்ச்சி ஜெகன்மோகன் மீண்டும் முதல்வராவது உறுதி appeared first on Dinakaran.

Tags : -door your ,Bagala ,Jeganmohan ,Zone Parishad Leader ,Tirupati ,Door/House Your Government ,door- ,Jaganmohan ,
× RELATED ஆந்திர முதல்வர் ஜெகனுக்கு ரூ.529 கோடி...