×

செங்கம் நகரில் புறவழிச் சாலை அமைக்கும் பணிகள் தீவிரம்

*நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு

செங்கம் : செங்கம் நகரில் சாலை அமைக்க உள்ள இடங்களை திருவண்ணாமலை கோட்டாட்சியர் மந்தாகினி வருவாய் துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரின் கனவு திட்டமான புற வழி சாலை அமைக்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

செங்கம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் வாக்குறுதியில் முக்கிய வாக்குறுதியாக நகரில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் உள்ளதால் இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான புறவழி சாலை விரைவில் அமைத்து போக்குவரத்து சரி செய்யப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ. வேலு, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி ஆகியோர் வாக்குறுதி அளித்தனர்.

இந்நிலையில் தேர்தல் வாக்குறுதியில் செங்கம் சட்டமன்ற தொகுதியில் 75 சதவீத பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக செங்கம் நகருக்கு புறவழி சாலை அமைக்கும் திட்டமாகும். தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து திட்டத்தை செயல்படுத்திட அரசாணை வெளியிட்டது.

அதன் தொடர்ச்சியாக போளூர் சாலை நீதிமன்றம் பகுதி முதல் மண்மலை கிராமம் புதுச்சேரி பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வரையில் சுமார் 3. 2 .கிமி தூரத்திற்கு புறவழி சாலை அமைக்கும் இடத்தினை ஏற்கனவே அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து நில ஆர்ஜிதம் செய்யப்பட்டது. தொடர்ந்து விவசாயிகள் பல்வேறு வகையான பயிர் வகைகளை பயிரிட்டதால் பயிர் அறுவடை வரை சாலை அமைக்கும் பணி சற்று நிறுத்தம் செய்யப்பட்டது.

இந்நிலையில் அறுவடை பணிகள் முழுமை பெற்ற நிலையில் நில ஆர்ஜிதம் வரைபடம் தயாரித்தல் விவசாய நிலம் வழங்குபவர்களுக்கு நில மதிப்பீடு வழங்குவது உரிய தொகை வழங்க அதற்குரிய பணிகளை வருவாய்த்துறை மற்றும் நில அளவை துறை மேலும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் நேற்று திருவண்ணாமலை கோட்டாட்சியர் மந்தாகினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆவியின் போது, தாசில்தார் முனுசாமி. நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் செல்வகணேஷ், துணை வட்டாட்சியர் தமிழரசி. தலைமை நிலை அளவையர் வெங்கடேசன், நில அளவையர் சேட்டு, கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார், வருவாய் ஆய்வாளர் ஞானவேல் ஆகியோர் உடன் இருந்தனர் ‌.

The post செங்கம் நகரில் புறவழிச் சாலை அமைக்கும் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Chengam ,Highway Department ,Thiruvandamalai ,Kottatsiyar Manthagini ,Sengam ,Dinakaran ,
× RELATED அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட...