×

கொடுவா மீன் சிப்பி அறுவடை

தொண்டி, ஜூன் 14:மத்திய உவர்நீர் மீன்வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் சென்னை, சார்பாக மத்திய உயிரியல் தொழில்நுட்ப துறை நிதி உதவியுடன் ராமநாதபுரம் மாவட்டம், காரங்காடு கிராமத்தில் இயங்கி வரும் ஒருங்கிணைந்த பன்னடுக்கு உவர்நீர் மீன் வளர்ப்பு முறை திட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று கொடுவா மீன் உவர்நீர் சிப்பி மற்றும் கடற்பாசி முதற்கட்டமாக அறுவடை செய்யப்பட்டது.இத்துடன் அறுவடை செயல் விளக்கம் அளிக்கப் பட்டது.

இந்நிகழ்ச்சியில் முனைவர் செந்தில் முருகன், முதன்மை விஞ்ஞானி தலைமை வகித்தார். இதில் 115 பயனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இத்திட்டத்தின் இணை அலுவலரான ஜெயபவித்ரன், தேவநாதன் களப்பணியாளர் இந்த அறுவடை மற்றும் மற்றும் சந்தை படுத்துதல் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார். மேலும், ஊராட்சி மன்றத் தலைவர் கார்மேல் மேரி செங்கோல் மற்றும் கிராம தலைவர்கள் பங்கு பெற்றனர்.

The post கொடுவா மீன் சிப்பி அறுவடை appeared first on Dinakaran.

Tags : Thondi ,Central Brackish Aquaculture Research Institute ,Chennai ,Central Department of Biotechnology ,Dinakaran ,
× RELATED தொண்டியை குளிர்வித்த மழை