×

அரசு கலைக்கல்லூரியில் கலந்தாய்வு

காரைக்குடி, ஜூன் 14: காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் 2023-2024ம் கல்வியாண்டில் முதலாமாண்டு இளநிலை மாணவர் சேர்க்கையில் காலியாக உள்ள இடங்களுக்கு இரண்டாம் கட்ட பொது கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதன்படி அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு 15ம் தேதியும், அனைத்து கலை பாடப்பிரிவுகளுக்கு 20ம் தேதி காலை 9 மணியளவில் நடத்தப்பட உள்ளது.

இக்கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவ,மாணவிகள் பெற்றோருடன் தங்களின் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மார்க் சான்று, சாதிச்சான்று, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகத்தின் நகல், நான்கு பாஸ்போர்ட் அளவு போட்டோகள் எடுத்து வரவேண்டும். தவிர கல்லூரிக்கு விண்ணப்பித்த விண்ணப்ப படிவத்தின் அனைத்து பக்கங்களையும் உள்ளடக்கிய நகல்கள் இரண்டும் கொண்டு வரவேண்டும் என முதல்வர் முனைவர் பெத்தாலட்சுமி தெரிவித்துள்ளார்.

The post அரசு கலைக்கல்லூரியில் கலந்தாய்வு appeared first on Dinakaran.

Tags : Govt Arts College ,Karaikudi ,Karaikudi Alagappa Government Arts College ,Dinakaran ,
× RELATED அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக டவுன்...