×

சோலைமலை முருகன் கோயிலில் ஜப்பான் நாட்டு பக்தர்கள் சாமி தரிசனம்

அழகர்கோவில், ஜூன் 14: சோலைமலை முருகன் கோயிலில் ஜப்பான் நாட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம், அழகர்கோவில் மலைமேல் முருகனின் ஆறாம் படைவீடான சோலைமலை முருகன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் நேற்று ஜப்பான் நாட்டை சேர்ந்த 9 பேர் கொண்ட சுற்றுலா பயணிகள் குழுவினர் பழநி புலிப்பாணி சித்தர் ஆசிரமம் மூலமாக வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

மேலும் இந்த குழுவினர் அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள், பதினெட்டாம்படி கருப்பணசாமி சன்னதிகளிலும் சாமி தரிசனம் செய்தனர். மேலும் அந்த குழுவினர்கள் கோயிலை சுற்றி வலம் வந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். முன்னதாக இந்த ஜப்பான் நாட்டு குழுவினரை கோயில் துணை ஆணையர் ராமசாமி மற்றும் பணியாளர்கள் வரவேற்றனர். ஏற்கனவே கடந்த வாரம் இதே போல் ஜப்பான் நாட்டை சேர்ந்த 40 பேர் கொண்ட குழுவினர் வந்து சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post சோலைமலை முருகன் கோயிலில் ஜப்பான் நாட்டு பக்தர்கள் சாமி தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Sami ,Solaimalai Murugan Temple ,Alagharkoil ,Japan ,Madurai District ,Alaghar Temple ,
× RELATED எங்களின் ஸ்பெஷாலிட்டி சாமி...