×

கற்பகம் பல்கலை. ஒப்பந்தம்

 

கோவை, ஜூன் 14: காரைக்குடி அழகப்பா பல்கலைகழகம், கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைகழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. இதில், அழகப்பா பல்கலைகழக துணை வேந்தர் ரவி, கற்பகம் பல்கலைகழக துணைவேந்தர் வெங்கடாசலபதி கையெழுத்திட்டனர். இதில் கற்பகம் பல்கலைகழக ஆராய்ச்சி துறை பேராசிரியர் பார்த்தசாரதி, உயிரி தகவலியல் துறை பேராசிரியர் ஜெயகாந்தன், பதிவாளர் ராஜ மோகன், அலமேலு, வேதிராஜன், பத்மபிரியா, ஜெயகாந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கற்பகம் பல்கலைகழக துணைவேந்தர் வெங்கடாசலபதி பேசுகையில், ‘‘மாணவர்களுக்கு தேசிய மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் வேலை வாய்ப்பும், ஆராய்ச்சி கல்விக்கும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும். புதிய ஆராய்ச்சிகளின் மூலமாக நாட்டு மக்கள் பயன்பெறுவர்’’ என்றார்.

The post கற்பகம் பல்கலை. ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Tags : Karpagam University ,Coimbatore ,Karaikudi Alagappa University ,Karpagam Virtual University ,Dinakaran ,
× RELATED கோவை மருத்துவமனையில் தொழிலாளி...