×

அம்மாபேட்டை பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் விநியோகம்

 

பவானி, ஜூன் 14: அம்மாபேட்டையில் அரசு நிதியுதவி பெறும் பெரியசாமி உயர்நிலைப்பள்ளி மற்றும் வேலவன் வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த கல்வியாண்டின் வகுப்புகள் நேற்று முன்தினம் தொடங்கியது. பள்ளி தொடங்கிய முதல் நாளில் மாணவ, மாணவிகள் ஆர்வமாக பள்ளிக்கு வந்தனர். இப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டது. இதனை கல்விக் குழுத்தலைவரும், முன்னாள் எம்பியுமான என்.ஆர்.கோவிந்தராஜர் மாணவ மாணவிகளுக்கு வழங்கி, வாழ்த்துக்கள் தெரிவித்தார். அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் கார்த்திகேயன், ஆசிரியைகள் குமுதா, முத்துலட்சுமி, சொப்னா தேவி, வேளாங்கண்ணி, சேது மற்றும் பெற்றோர் உடனிருந்தனர்.

The post அம்மாபேட்டை பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் விநியோகம் appeared first on Dinakaran.

Tags : Ammapet ,Bhawani ,Periyasamy High School ,Velavan Vidyalaya School ,Dinakaran ,
× RELATED சித்தப்பாவை பீர் பாட்டிலால் குத்திய வாலிபர் அதிரடி கைது