×

கத்தியால குத்தியதாக எதுவும் சொல்லாத; அரைநிர்வாணம் பண்ணி அடிச்சாங்கணு சொல்லுங்க… மனைவி தாக்கப்பட்டதாக கூறிய புகாரில் ராணுவ வீரரின் நாடகம் அம்பலம்

கண்ணமங்கலம்: மனைவியை தாக்கியதாக கூறி புகாரில், ராணுவ வீரர் நாடகமாடியது அம்பலமாகி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், படவேடு மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரன் தனது மனைவி கீர்த்தி (28) வாடகைக்கு கடை எடுத்த விவகாரத்தில் தாக்கப்பட்டதாக ஜம்மு காஷ்மீரில் இருந்து வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், நேற்று ராணுவ வீரர் பிரபாகரன் படவேட்டில் உள்ள அவரது உறவினர் வினோத்துடன் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில், ‘ஸ்டிரைக் பண்ணும்போது நமக்கு ஆட்கள் சப்ேபார்ட் வேண்டும். 10ல் இருந்து 20 பேர் வேண்டும்.

அதுக்கான ஆட்கள் நம்ப பசங்க ரெடியாக இருக்க வேண்டும். அதுக்கான ஏற்பாடு செய்ய வேண்டும். ஸ்டிரைக்ல பேசும்போது அரைநிர்வாணம் பண்ணி அடிச்சாங்க என்று சொல்லணும். கத்தியால குத்தியதாக எதுவும் சொல்லாத. அந்த கடையை திரும்ப கொடுத்தாலும் நமக்கு வேண்டாம், செல்வராஜ் களி திங்குற நேரம் வந்துவிட்டது. நமக்கு மானம்தான் முக்கியம். என் தங்கையை அடிக்கும்போது நான் சும்மா இருக்க முடியுமா? என்று கூற வேண்டும். என்னை தங்கையை அடித்தார்கள் நான் அடிக்க முடியாதா? என்று கேட்கணும்.

இது பெரிய பிரச்னையாக போய்கிட்டு இருக்குது. உனக்கு ஒண்ணும் தெரியல போலயே, படவேடு பயந்து போய் இருக்குது. நீ தெளிவா இரு. இந்த விஷயத்தை யார் கிட்டயும் சொல்லாத, நீ எதுவும் சொல்லாத, அழகா கொத்தாக தூக்கிட்டு போகட்டும். அதுக்கான ஏற்பாடு செய்ய வேண்டும். என்று ஆடியோ முடிகிறது. மனைவி தாக்கப்பட்டதாக கூறிய ராணுவ வீரர், ஊரில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post கத்தியால குத்தியதாக எதுவும் சொல்லாத; அரைநிர்வாணம் பண்ணி அடிச்சாங்கணு சொல்லுங்க… மனைவி தாக்கப்பட்டதாக கூறிய புகாரில் ராணுவ வீரரின் நாடகம் அம்பலம் appeared first on Dinakaran.

Tags : Kannamangalam ,Thiruvannamalai district ,Patavedu Mariamman temple ,
× RELATED அண்ணன் தலைமீது கல்லை போட்டு கொன்ற...