×

இலங்கையில் அதானி காற்றாலை மின்உற்பத்தி 2024 டிசம்பரில் தொடங்கும்

கொழும்பு: இலங்கையில் அதானி குழுமத்தின் காற்றாலை மின்உற்பத்தி அடுத்தாண்டு இறுதிக்குள் தொடங்கும் என அந்நாட்டின் மின்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கையின் வடகிழக்கு மாகாணத்தில் உள்ள மன்னாரில் 286 மெகா வாட் மற்றும் பூனேரியில் 234 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி செய்யும் திட்டத்துக்கு இந்தியாவின் அதானி குழுமத்துக்கு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கான ₹4,120 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், கொழும்பில் பத்திரிகையாளர்களை சந்தித்த இலங்கை மின்துறை அமைச்சர் காஞ்சனா விஜேசேகர, ‘’மன்னார் மற்றும் பூனேரியில் 500 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தயாரிக்கும் திட்டம் பற்றி அதானி மின்பரிமாற்ற நிறுவனம் மற்றும் திட்ட மேலாண்மை குழுவின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அனில் சர்தானா உடன் ஆலோசிக்கப்பட்டது. மேலும், இத்திட்டம் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள், வரும் 2024 டிசம்பருக்குள் திட்டத்தை முடிப்பதாக அதானி பசுமை எரிசக்தி குழுமம் கொடுத்த வாக்குறுதி ஆகியவை குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது,’’ என்று தெரிவித்தார்.

The post இலங்கையில் அதானி காற்றாலை மின்உற்பத்தி 2024 டிசம்பரில் தொடங்கும் appeared first on Dinakaran.

Tags : Adani wind farm ,Sri Lanka ,Colombo ,Adani Group ,Sri Lanka's… ,Dinakaran ,
× RELATED இன்று தொடங்குவதாக இருந்த நாகை-இலங்கை...