×

ஆதனூர் ஊராட்சியில் ரூ.2.63 கோடி மதிப்பீட்டில் புதிய தார்சாலை பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

கூடுவாஞ்சேரி: ஆதனூர் ஊராட்சியில் ரூ.2.63 கோடி மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கும் பணியினை, ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூர் ஊராட்சியில், ஆதனூர், டிடிசி நகர், கொருக்கன்தாங்கல், லட்சுமிபுரம், பலராமபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஆதனூரில் இருந்து கொருக்கந்தாங்கல் வழியாக மாடம்பாக்கம் செல்லும் 4.5 கிலோ மீட்டர் கொண்ட பிரதான சாலை கடந்த 10 ஆண்டுகளாக குண்டும், குழியுமாக காட்சியளித்து வந்தது.

இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி குரு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், செல்வப்பெருந்தகை எம்எல்ஏ, கலெக்டர் கலைச்செல்வி மோகன், மாவட்ட சேர்மன் படப்பை மனோகரன், ஒன்றிய சேர்மன் சரஸ்வதி மனோகரன் ஆகியோரிடம், ஆதனூர் திமுக ஊராட்சி மன்ற தலைவரும், தொழிலதிபருமான தமிழமுதன் மனு கொடுத்து தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அதன்பேரில், மேற்படி சாலையை அமைக்க ரூ.2 கோடியே 63 லட்சத்து 23 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு பூமிபூஜை விழா நேற்று நடைபெற்றது. இதில், திமுக ஒன்றிய கவுன்சிலர் மலர்விழிதமிழமுதன் தலைமை தாங்கினார்.

ஊராட்சி மன்ற துணை தலைவர் செல்விரவி மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆதனூர் திமுக ஊராட்சி மன்ற தலைவரும், தொழிலதிபருமான தமிழமுதன் அனைவரையும் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, மாவட்ட கவுன்சிலர் அமுதாசெல்வம், ஒன்றிய சேர்மன் சரஸ்வதி மனோகரன் ஆகியோர் கலந்துகொண்டு ரூ.2 கோடியே 63 லட்சத்து 23 ஆயிரம் மதிப்பீட்டில் ஆதனூரில் இருந்து கொருக்கந்தாங்கல் செல்லும் 4.5 கிலோ மீட்டர் கொண்ட பிரதான சாலையை தார் சாலையாக அமைக்க பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். மேலும், கடந்த 10 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத மேற்படி சாலையை தற்போது திமுக ஆட்சியில் சிரமைக்கப்படுவதால் ஆதனூர் ஊராட்சி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post ஆதனூர் ஊராட்சியில் ரூ.2.63 கோடி மதிப்பீட்டில் புதிய தார்சாலை பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Tarsala ,MLA ,Adanur Puradchi ,Goduvancheri ,Sripurudpur ,Rawappurundaki ,Bumibuj ,Adhuvancheri ,Tarsali ,Adanur Uradhi ,Dinakaran ,
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...