×

போடுறா கியர… தூக்குறா வண்டியா… பெண் எம்எல்ஏவின் ‘டிரைவிங் ஸ்கில்’

கர்நாடக மாநிலத்தில் அரசு பஸ்களில் மகளிருக்கான இலவச பயணம் எனும் சக்தி திட்டத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை பெங்களூருவில் முதல்வர் சித்தராமையா தொடங்கி வைத்தார். இதையடுத்து மாவட்டங்களில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமான முறையில் திட்டத்தை தொடங்கி வைத்தனர். அதன்படி தங்கவயல் தொகுதி காங்கிரஸ் பெண் எம்எல்ஏ ரூபகலா சசிதர், கர்நாடக அரசு பஸ்சை இயக்கி சக்தி திட்டத்தை தொடங்கி வைத்தார். அவர் பஸ்சை இயக்கும் போது அருகில் சீருடை அணிந்த டிரைவர் நின்று அவருக்கு கியர் மாற்றுவது குறித்து கற்றுக்கொடுக்கிறார். பெண் எம்எல்ஏ ரூபகலா சசிதர் பஸ்சை இயக்கத்தெரியாமல் ரிவர்ஸ் கியர் போட்டு இயக்கி பல வாகனங்களின் மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டதாக தகவல்கள் பரவின. ஆனால் சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவில் அதுபோன்ற எந்த காட்சியும் இடம்பெறவில்லை.

இதுகுறித்து எம்எல்ஏ ரூபகலா சசிதர் கூறியதாவது: நான் பஸ்சை இயக்கி பல வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதாக தவறான செய்திகள் பரப்பப்படுவது கண்டனத்துக்குரியது. சக்தி திட்டத்தை 100 மீட்டர் தூரம் அரசு பஸ்சை இயக்கி தொடங்கிவைத்தேன். எனக்கு வாகனம் இயக்க தெரியும். ஆனால் கனரக வாகன உரிமம் என்னிடம் கிடையாது. இதை சட்ட விதிமீறல் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் பெண்களுக்கான இலவச திட்டத்தை வித்தியாசமாக தொடங்கிவைக்கும் முயற்சி தான் இது’ என்றார்.

The post போடுறா கியர… தூக்குறா வண்டியா… பெண் எம்எல்ஏவின் ‘டிரைவிங் ஸ்கில்’ appeared first on Dinakaran.

Tags : Bhodra Geara ,MLA ,Karnataka ,Chief Minister ,Sitaramaiah ,Bangalore ,
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...