×

மதுவில் சயனைடு கலந்து 2 பேரை கொன்ற உறவினர்கள் கலெக்டர் விளக்கம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மயிலாடுதுறை மாவட்டம், திருவாரூர் மெயின் ரோட்டில் வசித்த பழனி குருநாதன் (55), தத்தங்குடி கிராம மஞ்சு நகர் பகுதி பூராசாமி (63) ஆகிய இருவரும் திருவாரூர் மெயின் ரோட்டில் உள்ள பழனி குருநாதனுக்கு சொந்தமான கொல்லன் பட்டறையில் 12ம் தேதி மாலை இறந்து கிடந்தனர். பட்டறையில் 180 மி.லி அளவுள்ள மதுபாட்டில்கள் இரண்டு கிடந்தன. அதில் ஒன்று காலியாகவும், மற்றொன்று மது பாட்டிலாகவும் இருந்தது. பிரேத பரிசோதனை அறிக்கையில், இறந்த இருவரது ரத்தம் மற்றும் உள்ளுறுப்புகளில் சயனைடு மற்றும் எத்தில்ஆல்கஹால் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு பின்னணியில் பழனி குருநாதனின் சகோதரர்களான மனோகரன் மற்றும் பாஸ்கரன் (இருவரும் முதல் மனைவியின் மகன்கள்) சொத்துத்தகராறு காரணமாக மதுவில் சயனைடு கலந்து கொலை செய்தது கண்டறியப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post மதுவில் சயனைடு கலந்து 2 பேரை கொன்ற உறவினர்கள் கலெக்டர் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,Mahabharathi ,Palani Gurunathan ,Mayiladuthurai district ,Tiruvarur ,
× RELATED மயிலாடுதுறையில் திடீர் பரபரப்பு உயர்...