×

மே 1ம்தேதி முதல் ஜூன் 11ம்தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் ரூ.151.31 கோடி காணிக்கை

திருமலை: கோடை விடுமுறை தினமான மே 1ம்தேதி முதல் கடந்த ஜூன் 11ம்தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 30.31 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து ரூ.151.31 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் இறுதி தேர்வு முடிந்து கல்வியாண்டு நிறைவடைந்தது. இதையடுத்து, கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. நேற்று முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்த நிலையில் கோடை விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த மே 1ம்தேதி முதல் நேற்று முன்தினம் வரை 30 லட்சத்து 31 ஆயிரத்து 677 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் கோயில் உண்டியலில் ரூ.151.31 கோடி காணிக்கையாக செலுத்தியுள்ளனர். 15 லட்சத்து 35 ஆயிரத்து 894 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். பள்ளிகள் திறந்தாலும் தொடர்ந்து இம்மாதம் முடியும் வரை பக்தர்கள் கூட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்ப ஜூன் 30ம் தேதி வரை முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதம் மூலம் வழங்கப்படும் விஐபி தரிசனம் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post மே 1ம்தேதி முதல் ஜூன் 11ம்தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் ரூ.151.31 கோடி காணிக்கை appeared first on Dinakaran.

Tags : Tirupati Eyumalayan Temple ,Tirumala ,Tirupati ,Sevenmalayan Temple ,
× RELATED திருப்பதி மலைப்பாதையில் பக்தர்கள் கண்முன் சாலையை கடந்த சிறுத்தை