×

வேப்பேரியில் இன்று காலை பரபரப்பு; மரம் முறிந்து ஸ்கூட்டரில் சென்ற போலீஸ் தம்பதி படுகாயம்: ஆபத்தான நிலையில் காவலருக்கு சிகிச்சை

சென்னை: வேப்பேரியில் ஈவிஆர் சாலையில் திடீரென மரம் கிளை ஒன்று முறிந்து ஸ்கூட்டரில் சென்ற போலீஸ் தம்பதி மீது விழுந்தது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர். சென்னை கொருக்குபேட்டை காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பெண் காவலராக சுகப்பிரியா பணியாற்றி வருகிறார். இன்று காலை சுகப்பிரியா தனது கணவரான காவலர் ஆனந்தராஜ் உடன் ஸ்கூட்டரில் காவல் நிலையத்திற்கு பணிக்கு சென்று கொண்டிருந்தார். ஸ்கூட்டர் வேப்பேரி ஈவிஆர் சாலையில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகே வரும் போது, திடீரென சாலையோரம் இருந்த மரத்தின் கிளை ஒன்று முறிந்து போலீஸ் தம்பதியின் ஸ்கூட்டர் மீது விழுந்தது.

இதில் காவலர் ஆனந்தராஜ் பலத்த காயமடைந்தார். அவரது மனைவி சுகப்பிரியா லேசான காயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் துடித்த காவலர் ஆனந்தராஜை, அப்போது போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தங்களது வாகனத்தில் இருவரையும் ஏற்றிக்கொண்டு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஆனந்தராஜூக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பின்னர் சாலையில் முறிந்த மரக்கிளையை போர்க்கால அடிப்படையில் போலீசார் அகற்றினர். இந்த விபத்து குறித்து எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மரக்கிளை முறிந்து பணிக்கு சென்ற போலீஸ் தம்பதி படுகாயமடைந்த சம்பவம் போலீசாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post வேப்பேரியில் இன்று காலை பரபரப்பு; மரம் முறிந்து ஸ்கூட்டரில் சென்ற போலீஸ் தம்பதி படுகாயம்: ஆபத்தான நிலையில் காவலருக்கு சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Vepperi ,Chennai ,EVR Road ,Dinakaran ,
× RELATED பெண்ணின் தந்தை மீது தாக்குதல் : காவலர் மீது வழக்கு!!