×

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிராக கருத்து தெரிவித்த அண்ணாமலைக்கு எதிராக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஜெயலலிதா குறித்து அண்ணாமலை பேசியது பற்றி ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலைக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டதுடன், அண்ணாமலைக்கு எதிரான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக அதிமுக கூட்டணியில் பாஜக நீடித்து வரும் நிலையில் அதிமுக ஊழல் பட்டியல் வெளியிடுவேன் என அண்ணாமலையின் கருத்து அதிமுகவிற்கு அதிர்ச்சியை கொடுக்கக் கூடியதாக மாறி உள்ளது.

அத்துடன் ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர் என அண்ணாமலை பேசியுள்ளது அதிமுகவுடன் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இதனால் அதிமுகவை சேர்ந்த முக்கிய புள்ளிகள் தொடர்ந்து அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து வருவது குறிபிடத்தக்கது.

The post தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்! appeared first on Dinakaran.

Tags : nadu ,bajka ,anamalai ,Chennai ,Annamalai ,Chief Chief Chief ,Jayalalithah ,Tamil ,Anamalai Raja ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...