×

தமிழ்நாட்டில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை தடுக்க ஐகோர்ட் அறிவுரை

சென்னை: தமிழ்நாட்டில் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படாத வகையில் விழிப்புடன் இருக்குமாறு அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் சிட்லபாக்கம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. சிட்லபாக்கம் ஏரியில் சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்க உத்தரவிடவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அறப்போர் இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சிட்லபாக்கம் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 403 கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசு பதில் அளித்துள்ளது. ஆக்கிரமிப்பாளர்கள் 403 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் உயர்நீதிமன்றத்தில் அரசு வக்கீல் தகவல் அளித்துள்ளார். அரசின் நோட்டீசை எதிர்த்து ஆக்கிரமிப்பாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்தார். அரசு தரப்பு பதிலை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் சிட்லபாக்கம் ஏரியை மீட்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்….

The post தமிழ்நாட்டில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை தடுக்க ஐகோர்ட் அறிவுரை appeared first on Dinakaran.

Tags : iCort ,Tamil Nadu ,Chennai ,Chengalpadu District ,Sidlapakam Lake ,
× RELATED மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக...