டெல்லி : இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பதவிக்கு ஜூலை 4ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷண் தங்களின் 6 பேருக்கு பாலியல் தொந்தரவு அளித்தார் என்று குற்றம் சாட்டி 6 மாதங்களாக மல்யுத்த வீரர்கனைகள் போராடி வருகின்றன. பிரிஜ் பூஷண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டும் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. 12 ஆண்டுகளாக தலைவராக உள்ள பிரிஜ் பூஷணின் பதவிக்காலம் மார்ச் மாதத்துடன் நிறைவடைந்ததால் மே 7ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டும் அன்று தேர்தல் நடத்தப்படவில்லை.
இதனிடையே பூஷணை கைது செய்யக் கோரி போராடிய போது, மே 28ம் தேதி டெல்லியில் வீராங்கனைகள் கைது செய்யப்பட்டது பதக்கத்தை ஆற்றில் வீச முயன்ற சம்பவங்களால் சர்வதேச மல்யுத்த சம்மேளனம் அதிர்ச்சி அடைந்தது. அடுத்த 45 நாட்களுக்குள் தேர்தலை நடத்தவில்லை என்றால் அங்கீகாரத்தை ரத்து செய்யப்போவதாக எச்சரித்தது. இதையடுத்து ஜூலை 4ல் தேர்தல் நடைபெறும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது. தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று பிரிஜ் பூஷண் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
The post இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பதவிக்கு ஜூலை 4ம் தேதி தேர்தல்… பாலியல் புகாரில் சிக்கிய பிரிஜ் பூஷண் போட்டியிட மாட்டார்!! appeared first on Dinakaran.
