×

பாலியல் வழக்கில் கோவை மாணவி தற்கொலை வழக்கு.. கைதான ஆசிரியர் மிதுனின் மனைவியும் போக்சோவில் கைது

கோவை : கோவையில் பாலியல் வழக்கில் கைதான இயற்பியல் ஆசிரியர் மிதுனின் மனைவி அர்ச்சனா போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.கோவையில் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த 11ம் வகுப்பு மாணவி ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். அவரது கடிதத்தை கைப்பற்றி விசாரித்த போலீசார் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு குறித்து நன்கு தெரிந்தும் நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனும் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் மாணவியின் வீட்டின் அருகில் வசித்து வந்த மனோஜ் ராஜ் மற்றும் முகமது சுல்தான் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பின்பு இந்த வழக்கில் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கவர்த்தியின் மனைவி அர்ச்சனாவை மகளிர் காவல்துறையினர் இன்று காலை கைது செய்தனர். மிதுன் சக்கரவர்த்தியின் பாலியல் துன்புறுத்தலால் மாணவி பாதிக்கப்பட்டது தெரிந்தும் காவல்துறைக்கு புகார் தெரிவிக்காததால் அர்ச்சனாவையும் போக்சோ சட்டத்தில் கைது செய்த மகளிர் காவல் நிலைய போலீசார் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post பாலியல் வழக்கில் கோவை மாணவி தற்கொலை வழக்கு.. கைதான ஆசிரியர் மிதுனின் மனைவியும் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Tags : Govai ,Mithunn ,Boxo ,Archana Boxo ,Mithun ,Goa ,
× RELATED கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி 6 பேர் படுகாயம்!