×

எப்போது வருகிறது? எப்போது போகிறது? துங்காவியில் பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்கள்

 

உடுமலை, ஜூன் 13: பழனி முதல் கோபி வரை இயக்கப்படும் பேருந்து மடத்துக்குளம், துங்காவி, பூளவாடி ஆகிய வழித்தடங்களில் சென்று திருப்பூரை அடைகிறது. தினந்தோறும் துங்காவிக்கு காலை 7.15 மணிக்கு வரும் இந்த பேருந்தில் அரசு ஊழியர்கள் மற்றும் பனியன் கம்பெனி தொழிலாளர்கள் அனைவரும் பயணித்து வருகிறார்கள்.சரியாக வந்து கொண்டிருந்த இந்த பேருந்து தற்போது எப்போது வருகிறது? எப்போது போகிறது? என்று தெரியாமல் உள்ளது.

திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பேருந்து வருகிறதா? வரவில்லையா? என்று தெரியாமல் மிகுந்த சிரமப்பட்டு வருகிறார்கள். துறை சார்ந்த அதிகாரி சரியான நேரங்களில் பேருந்தை இயக்க செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.9-ம் தேதி காலை 7.15 மணிக்கு வரவேண்டிய இப்பேருந்து வரவில்லை. இதுபோன்று பலமுறை நடந்து வருகிறது. ஆகையால் துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

The post எப்போது வருகிறது? எப்போது போகிறது? துங்காவியில் பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்கள் appeared first on Dinakaran.

Tags : Dungavi ,Udumalai ,Palani ,Gobi ,Mathikulam ,Thungavi ,Poolavadi ,Dinakaran ,
× RELATED உடுமலை அரசு மருத்துவமனையில் சம்பளம் கேட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம்