×

மனித-விலங்கு மோதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

 

கூடலூர், ஜூன் 13: தமிழ்நாடு வனத்துறை சார்பில் மனித-விலங்கு மோதல் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி காந்தி நகர், பார்வுட், கிளன்வன்ஸ், சீபுரம், நாயக்கன்பாடி, குறும்பர்பாடி, ஐயப்பமட்டம், எல்லமலை ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. பொது மக்களுக்கு யானைகள் மனித மோதலை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

ஓவேலி வனச்சரக அலுவலர் யுவராஜ் மற்றும் அனைத்து சீருடை பணியாளர்கள் முன்னிலையில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி மூலம் பொம்மை கலை குழுவினர் வனவிலங்கு மனித மோதலை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வேட்டை தடுப்பு காவலர்கள், யானை கண்காணிப்பு குழுவினர்கள், தேயிலை தோட்டத் தொழிலாளர்கள், ஜீப் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post மனித-விலங்கு மோதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Kudalur ,Tamilnadu forest ,Gandhi ,Dinakaran ,
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...