×

பந்தலூர் மேற்கு ஒன்றியம் சார்பில் கலைஞர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

 

பந்தலூர், ஜூன் 13: பந்தலூர் அருகே சேரம்பாடி செக்போஸ்ட் பகுதியில் பந்தலூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சிவானந்தராஜா தலைமை வகித்து கட்சி கொடியேற்றி வைத்தார். இதைத்தொடர்ந்து, கலைஞர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பொதுக்குழு உறுப்பினர் மாங்கோடு ராஜா முன்னிலை வகித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். தொடர்ந்து, திமுக பேச்சாளர் வடிவேலன் வரவேற்று பேசினார்.

இந்நிகழ்ச்சியில், ஒன்றிய அவை தலைவர் கோபால், மாவட்ட பிரதநிதி மற்றும் சேரங்கோடு ஊராட்சி மன்ற துணை தலைவர் சந்திரபோஸ், மாவட்ட பிரதநிதி கணபதி, ஒன்றிய பொருளாளர் உம்மர், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் சிவசங்கர், வார்டு உறுப்பினர் முத்துசாமி கிளை செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நவரத்தினம், சந்திரன், கூழால் ராஜன், அருள்ராஜ், வேம்புடி ஆதி, ராமலிங்கம், அப்புராஜ், கையுன்னி செல்வம், இளங்கோ,லோகேஷ், நீலமேகம், விஜயசிங்கம், அனில், பழனியாண்டி குமார், தேவா, அண்ணாதுரை, சத்தி, புஸ்பராணி, சேகர், மணிராஜ், முருகேஷ், கோல்டன் ராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இறுதியாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கிளை செயலாளர் கிச்சான் என்கிற நாகையா நன்றி கூறினார்.

The post பந்தலூர் மேற்கு ஒன்றியம் சார்பில் கலைஞர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Bandalur West Union ,Bandalur ,Bandalur West Union DMK ,Cherambadi ,Dinakaran ,
× RELATED தொடர் மழை எதிரொலி வணிக வளாகத்தில் மழைநீர் புகுந்தது