ஏற்காடு, ஜூன் 13: சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில், கடந்த 2 மாதமாக கோடை வெயில் சுட்டெரித்த நிலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு வருகை தந்தனர். வெயில் அதிகம் வாட்டியதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாயினர். இந்நிலையில் நேற்று காலை முதலே வெயில் அடித்து வந்த நிலையில் மாலையில் மேக கூட்டம் திரண்டது. இரவு 7 மணிக்கு திடீரென மழை பெய்யத் துவங்கியது. சாரலாக பெய்த நிலையில்,திடீரென கன மழை பெய்தது. இதில் தாழ்வான பகுதியில் மழை நீர் பெருக்கெடுத்து சென்றது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன பெய்ததால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தொடர்ந்து கூடலூர், முளுவி, ஒண்டிகடை, புத்தூர், ,கொம்மகாடு, அசம்பூர், மஞ்சகுட்டை உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது.
The post வெயில் அதிகரித்த நிலையில் ஏற்காட்டில் கன மழை appeared first on Dinakaran.
