×

நாகூர் தர்கா சந்தன கூடு விழாவையொட்டி புனித சந்தனம் அரைக்கும் பணி துவக்கம்

நாகப்பட்டினம்,ஜூன்13: புகழ் பெற்ற நாகூர் தர்காவின் சின்ன ஆண்டவர் சந்தன கூடு விழாவை முன்னிட்டு புனித சந்தனம் அரைக்கும் பணி தொடங்கியது. புகழ்பெற்ற நாகூர் தர்காவின் சின்ன ஆண்டவர் என்று அழைக்கப்படும் ஹஜ்ரத் செய்யது முஹம்மது யூசுப் சாஹிப் (ரலி) வருடாந்திர கந்தூரி விழா வரும் 19ம் தேதி தொடங்குகிறது. இதை தொடர்ந்து வரும் 21ம் தேதி புனித மஜாரில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக நேற்று நாகூர் தர்காவில் சந்தனம் அரைக்கும் பணி தொடங்கியது. சந்தன கட்டைகளை ஒரு அடி துண்டுகளாக்கி அதை பன்னீரில் ஊற வைத்தனர். பின்னர் ஜவ்வாது மற்றும் வாசனை திரவியங்கள் சேர்த்து நாகூர் தர்கா பரம்பரை டிரஸ்டிகளால் பாத்திஹா துவா ஓதப்பட்டு சந்தனம் அரைக்கும் பணி தொடங்கியது.

The post நாகூர் தர்கா சந்தன கூடு விழாவையொட்டி புனித சந்தனம் அரைக்கும் பணி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Nagor Dargah sandalwood festival ,Nagapattinam ,lord sandalwood ,Nagor Darga ,Nagor Darga sandalwood festival ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு, தனியார் ஐடிஐ-ல் மாணவர்கள் சேர்க்கை