×

வாலாஜாபாத் வழியாக இயக்கப்படும் கனரக லாரிகளுக்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்படுமா?..எதிர்பார்ப்பில் கிராம மக்கள்

வாலாஜாபாத்: கனரக லாரிகளுக்கு நேர கட்டுப்பாடுடன் இயக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்பில் உள்ளனர். வாலாஜாபாத் ரவுண்டானாவிலிருந்து அவளூர் வரை செல்லும் பாலாற்று தரைபாலம் வழியாக நாள்தோறும் தம்மனூர், கன்னடியன் குடிசை, அவளூர், ஆசூர், காமராஜபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களை சேர்ந்த மக்கள், வாலாஜாபாத் வந்து இங்கிருந்து நாள்தோறும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், செங்கல்பட்டு, ஓரகடம், மறைமலைநகர், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு நகர் பகுதிகளில் செயல்படும் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் பணியாற்றுவோர் என நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர்.

இதேபோல் சுற்றுவட்டார கிராமங்களை சார்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகளும் வாலாஜாபாத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் யிலும் மாணவ- மாணவிகள் சைக்கிள் மற்றும் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் பைக்கில் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் இந்த தரைப்பாளத்தின் வழியாக நாள்தோறும் சுற்றுவட்டார கிராமங்களில் செயல்படும் கல்குவாரிகள் மற்றும் நெய்யாடுப்பாக்கம் கிராமத்தில் ஏரி சவுட்டு மண் எடுத்துசெல்ல நாள்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகள் இந்த தரைப்பாளத்தின் வழியாக சென்று வருகின்றன. இதனால், தரைபாலம் முழுவதும் ஆங்காங்கே சிதலமடைந்து காணப்பட்டன. இதனை சீரமைக்க வலியுறுத்தி நேற்று முன்தினம் கிராம மக்கள் கனரக லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இந்த வழியாக செல்லும் கனரக லாரிகளை நேர கட்டுப்பாட்டுடன் இயக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு அதிகாரிகள், சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தனர். இருப்பினும் நேற்று காலை பள்ளி நேரங்களில் எந்தவித கட்டுப்பாடும் இன்றி கனரக லாரிகள் இயக்கப்பட்மதால் கிராம மக்களும், சமூக ஆர்வலர்களும் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே இருந்த மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, இப்பகுதியில் கனரகராக லாரிகளை இயக்கக் கூடாது எனவும், பள்ளி மற்றும் அலுவலக நேரங்களில் கனரக லாரிகளால் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டு காலதாமதமாக அலுவலகம் மற்றும் பள்ளிகளுக்கு செல்லும் நிலை ஏற்படுவதால் நேர கட்டுப்பாடும் விதித்திருத்தனர்.

கோடை விடுமுறை என்பதால் இந்த நேர கட்டுப்பாடு அவர்களாகவே தளர்வுக்கு கொண்டு வந்த நிலையில் மீண்டும் கனரக லாரிகளின் அச்சுறுத்தல் இப்பகுதியில் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில் தற்போது உள்ள மாவட்ட கலெக்டர் கலைச்செல்விமோகன், இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு உடனடியாக வாலாஜாபாத் வழியாக இயக்கப்படும் சவுட்டு மண் மற்றும் மலைமண் எடுத்துச் செல்லும் கனரக லாரிகளை நேர கட்டுப்பாடுடன் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர்களும், கிராம மக்களும் வலியுறுத்துகின்றனர்.

The post வாலாஜாபாத் வழியாக இயக்கப்படும் கனரக லாரிகளுக்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்படுமா?..எதிர்பார்ப்பில் கிராம மக்கள் appeared first on Dinakaran.

Tags : Walajabad ,Wallajahabad ,Wallajabad ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு...